top of page

Tamil Department - Objectives

  • செம்மொழியாம் தமிழின் சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான பாடத்திட்டங்களை அறிவியல்பூர்வமாகவும் முறையாகவும் கற்பித்தல்.

  • மாணவர்களிடையே தமிழ் மொழியாற்றல் (பேச்சு, எழுத்து, வாசிப்பு) மற்றும் இலக்கிய ரசனையை மேம்படுத்துதல்.

  • விமர்சன சிந்தனை, ஆய்வாற்றல், படைப்பாற்றல் ஆகியவற்றை மாணவர்களிடையே வளர்த்தெடுத்தல்.

  • தமிழ் இலக்கணம், இலக்கியவரலாறு, பண்பாட்டு அடிப்படைகள் குறித்த ஆழ்ந்த அறிவை மாணவர்களுக்கு வழங்குதல்.

  • தமிழ்க் கணிமை, மொழிபெயர்ப்பியல், ஊடகவியல் போன்ற தற்கால தேவைகளுக்கேற்ற புதிய கல்வித் தளங்களில் மாணவர்களைப் பயிற்றுவித்தல்.

  • ஆய்வுக் கட்டுரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆய்வுத்திறனை மேம்படுத்துதல்.

  • மாணவர்களை போட்டித் தேர்வுகள் (TNPSC, NET/SET போன்றவை), கல்வித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட பல்வேறு பணி வாய்ப்புகளுக்கு தகுதிப்படுத்துதல்.

  • நாட்டுப்புற இலக்கியம், தொல்லியல், கல்வெட்டியல் போன்ற துணைத் துறைகளுடன் தமிழை இணைத்து ஆய்வு நோக்கை விரிவுபடுத்துதல்.

  • மாணவர்களிடையே தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் வளர்த்தல்.

  • கல்லூரி-சமூக இணைப்பு நிகழ்வுகள், தமிழ் மொழி வாரம், இலக்கியக் கருத்தரங்குகள் போன்றவற்றின் மூலம் தமிழை பரவலாக்குதல்.

bottom of page