top of page

Tamil Department - Mission

    செம்மொழியாம் தமிழின் இலக்கிய, மொழியியல், பண்பாட்டுச் செல்வங்களை முறையான கல்வி முறையின் வாயிலாக மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதே எமது துறையின் பணிநோக்கமாகும். இதற்காக

  • சங்க இலக்கியம் முதல் நவீன தமிழ் இலக்கியம் வரையிலான பாடத்திட்டங்களை ஆழமும் அகலமும் கொண்டதாக வடிவமைத்துக் கற்பித்தல்.

  • மாணவர்களிடையே மொழியாற்றலையும் இலக்கிய ரசனையையும் வளர்த்து, திறனாய்வுச் சிந்தனையையும் ஆய்வுத்திறனையும் ஊக்குவித்தல்.

  • தமிழ்க் கணிமை, மொழிபெயர்ப்பியல், நாட்டுப்புற அறிவுமுறைமைகள் போன்ற புதிய கல்வித் தளங்களில் மாணவர்களை பயிற்றுவித்து, காலத்திற்கேற்ப தமிழை மேம்படுத்துதல்.

  • ஆய்வுப் பணிகள், கருத்தரங்குகள், வெளியீடுகள் மூலம் தமிழாய்வுத் துறைக்குப் புதிய பங்களிப்புகளை வழங்குதல்.

  • மாணவர்களை அரசுப் பணி, கல்வித்துறை, ஊடகம், ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கு தகுதி பெறச் செய்தல்.

  • தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களையும் சமூகப் பொறுப்புணர்வையும் மாணவர்களிடையே வளர்த்தல்.

bottom of page